சென்னை: நவராத்திரி திருநாளை முன்னிட்டு ஒன்பது நாள்களும், ஒன்பது நிற ஆடைகளை பணியாளர்களை அணிந்து வரச்சொல்லி யூனியன்பாங்க் ஆஃப் இந்தியா பொது மேலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த சுற்றறிக்கையில், எந்த நாள், என்ன நிறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் எம்பி ஜோதிமணி, “யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் 9 நாள்களும் 9 நிற ஆடைகளை அணிந்து வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
என்ன உடை என்பதை சொல்ல மறந்துவிட்டார் போல!, இது போன்ற அத்துமீறல்களை, அராஜகங்களை மோடி அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது. உடனடியாக உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்