ETV Bharat / bharat

இறந்த மனைவியை அடக்கம் செய்ய பணம் இல்லை; பிளாஸ்டிக் பையில் தூக்கிச்சென்ற கணவர் - இறந்த மனைவியை அடக்கம் செய்ய காசு இல்லை

கர்நாடகாவில் தன் இறந்த மனைவியின் உடலை அடக்கம் செய்யக் கூட பணம் இல்லாததால் கணவனே பிளாஸ்டிக் பையில் வைத்து மனைவியின் சடலத்தை சுமந்து சென்ற அவல நிலை அரங்கேறியுள்ளது.

இறந்த மனைவியை அடக்கம் செய்ய காசு இல்லை..! ; பிளாஸ்டிக் பையில் தூக்கிச் செல்லும் கணவர்

author img

By

Published : Dec 7, 2022, 8:53 PM IST

சாமராஜநகர்(கர்நாடகா) : இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்ய பணம் இல்லாததால் தன் மனைவியின் உடலை கணவனே பிளாஸ்டிக் பையில் சுமந்து திரியும் அவல சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவி என்னும் இவரின் மனைவி காலம்மா(26) நேற்று(டிச.6) உடல் நிலை குன்றியதால் உயிரிழந்தார்.

கடந்த 15 நாட்களாக இவரும் இவரது மனைவி காலம்மாவும் யலந்தூர் வனத்துறை அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் குப்பைகள், சேதமடைந்த வீட்டு சாதனங்கள் ஆகியவற்றைப் பொறுக்கி எடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உயிர் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது மனைவியின் எதிர்பாராத உயிரிழப்பால் அதிர்ச்சிக்குள்ளான கணவர் ரவி, அவரின் உடலை அடக்கம் செய்யக் கூட பணம் இல்லாத காரணத்தினால் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் சுமந்தபடி இறுதி சடங்கு செய்ய சுவர்நவதி நதிக்கரைக்கு தன் தோளில் வைத்தே சுமந்துசென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனே விரைந்து சென்று ரவியிடம் விசாரணை நடத்தி, அவரது மனைவி காலம்மாவின் உடலை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடற்கூராய்விற்குப் பின்னர் இதுகுறித்த மேல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெற்ற குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரத்தாய்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.