கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC), வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகம் (NWKRTC), வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் (NEKRTC) தொழிலாளர்கள், மாநில அரசு 6 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியத்தை வழங்கவில்லை எனக் கூறி இன்று (ஏப். 7) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து உடுப்பி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குய்லாடி சுரேஷ் கூறுகையில், "பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கிலும், மாநில அரசின் கோரிக்கைபடி, கர்நாடக மாநிலம் முழுவதும் 32 ஆயிரம் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்"என்றார்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கார், டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக அரசுப் பேருந்து மோதி விபத்து: ஆடு மேய்ப்பவர் உயிரிழப்பு!