ETV Bharat / bharat

ரேக்ளா ரேஸ்: மாட்டு வண்டி பந்தயத்தில் இரு பார்வையாளர்கள் மாடு முட்டி பலி!

கர்நாடாகவில் இரு வேறு இடங்களில் மாட்டு வண்டி பந்தயத்தை காணச் சென்ற இருவர் மாடு முட்டித் தூக்கியதில் உயிரிழந்தனர்.

ரேக்ளா ரேஸ்
ரேக்ளா ரேஸ்
author img

By

Published : Jan 16, 2023, 10:50 PM IST

சிவமோகா: சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயங்களில் இரு பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். கோனகானவள்ளி கிராமத்தில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயத்தைக் காண அண்டை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அல்கோலா காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லோகேஷ் ஆர்வமுடன் மாட்டு வண்டி பந்தயத்தைக் காண வந்துள்ளார். திடீரென ஓடுபாதையை விட்டு வெளியேறிய மாடு, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

மாடு முட்டி தாக்கியதில் நெஞ்சு பகுதியில் படுகாயம் அடைந்த லோகேஷ் சாலையில் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக லோகேஷின் மனைவி அளித்த புகாரில் விழா கமிட்டியினர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவமாக மலூர் கிராமத்தில், இதே போன்று நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் மாடு முட்டித் தூக்கி எறிந்ததில் 23 வயதான ரங்கநாத் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கநாத் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பந்தயத்தின் போது மாடு முட்டியதில் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பந்தயத்தை நடத்திய குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: Ganga Vilas: கங்கையில் நீர் குறைவு.. தரை தட்டிய கங்கா விலாஸ் கப்பல்..சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.