ETV Bharat / bharat

பொது நிகழ்ச்சியில் பெண்ணை அறைந்த அமைச்சர்..!வைரல் வீடியோ.. - சோமண்ணா

கர்நாடக மாநிலத்தில் நிலப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பெண் ஒருவரை அமைச்சர் சோமண்ணா அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 23, 2022, 5:33 PM IST

கர்நாடகா மாநிலம் சாமராசநகர் மாவட்டத்திலுள்ள ஹங்கலா கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி.சோமண்ணா பொதுமக்களுக்குப் பட்டா வழங்கினார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பட்டா வழங்கபட்டவில்லை எனக் கூறி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ஆத்திரமடைந்த அமைச்சர் அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்.

சம்பவத்தை மறுத்த பெண்:

அமைச்சர் பொது நிகழ்ச்சியில் பெண் ஒருவரை அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் இந்த சம்பவம் குறித்துப் பதிலளித்துள்ள பெண் கெம்பம்மா, அமைச்சர் என்னை அறையவில்லை, நான் உணர்ச்சிவசப்பட்டபோது ஆறுதல் கூறினார்.

பிரனாய் என்ற பாஜக இளைஞரணித் தலைவருடன் காணொளி மூலம் பதிலளித்த அந்தப் பெண்,'அவருடைய கால்களைத் திரும்பத் திரும்பத் தொடும் போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அமைச்சர் என்னிடம் கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டேன். உடனே, அமைச்சர் என்னைச் சமாதானப்படுத்தி, எனக்கு வீட்டுத் திட்டம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். அவர் எனக்கு நல்லது செய்துள்ளார், தீமை செய்யவில்லை” என்றார்.

பொது நிகழ்ச்சியில் பெண்ணை அறைந்த அமைச்சர்

இதையும் படிங்க: தெலங்கானாவில் நுழைந்த ராகுல்காந்தி நடைப்பயணம்; தள்ளி வைக்கப்படுவதாகத் தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.