ETV Bharat / bharat

சர்ச்சை பேச்சு: சித்தராமையாவிடம் மன்னிப்பு கோரிய கர்நாடக அமைச்சர் அஷ்வத் - திப்பு சுல்தான் சர்ச்சை பேச்சு

திப்பு சுல்தானை போல் சித்தராமையாவை முடித்துவிடுங்கள் என, பாஜக அமைச்சர் அஷ்வத் நாராயண் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், சித்தராமையாவிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமைச்சர்
அமைச்சர்
author img

By

Published : Feb 16, 2023, 10:14 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், "நீங்கள் விரும்புவது திப்புவா?, இல்லை சாவர்க்கரா? இந்த திப்பு சுல்தானை எங்கே அனுப்புவது? நஞ்சே கவுடா என்ன செய்தார்? அதைப் போலவே சித்தராமையாவையும் முடிக்க வேண்டும்" எனக் கூறினார்.

அமைச்சர் அஷ்வத்தின் இந்த பேச்சால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட சித்தராமையா, "பொதுமக்கள் என்னை கொலை செய்வதற்கு, அமைச்சர் அஷ்வத் தூண்டிவிடுகிறார். அவரை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நீக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் சார்பில், அமைச்சர் அஷ்வத் நாராயண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் திப்பு சுல்தானை வணங்குவோர், கர்நாடகாவில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் என பாஜக தலைவர் நலின் குமார் பேசியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது கருத்துக்கு அமைச்சர் அஷ்வத் நாராயண் சித்தராமையாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர் கூறுகையில், "சித்தராமையாவை பற்றி தனிப்பட்ட முறையில் நான் எதுவும் கூறவில்லை. நான் அரசியல் ரீதியாகத்தான் பேசினேன். எனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிவசேனா முன்னாள் அமைச்சர் மீது பெண் பாலியல் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.