கர்நாடகா: மங்களூருவில் சமீபத்தில் நடந்த ஆட்டோ வெடித்த சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு முகமையினை சேர்ந்த நான்கு பேர் அடங்கிய குழு சம்பவ இடத்தில் விசாரித்து வருகின்றது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தையும், ஆட்டோ வைக்கப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட், 'தற்போது தான் உறுதியானது. நடந்த ஆட்டோ வெடிப்புச்சம்பவம் ஓர் விபத்தல்ல, பயங்கரவாதத் தாக்குதல். இதுகுறித்து கர்நாடகா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்' எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று(நவ.19) பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து, மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா , 'இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாநில காவல் துறையினருடன் தேசியப் புலனாய்வு முகமையும் சேர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள்படி இச்சம்பவமானது நேற்று(நவ.19) மாலை 4:30 மணி முதல் 5:00 மணிக்குள் நடந்தேறியுள்ளது. இதை நேரில் கண்ட புது மக்கள், 'பல பட்டாசுகளை ஒன்றாக வெடித்தது போல ஓர் பெரும் சத்தம் கேட்டது. இந்த வெடிகுண்டு விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் பயணியும் சரமாரியாக தீக்காயங்களுக்குள்ளாகினர். அவர்களை வேறொரு ஆட்டோவில் மருத்துவமனையில் அனுமதித்தோம்’ எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானபோது, அதில் ஆட்டோ தீப்பிடிப்பதும், அதனாலேயே அது வெடிப்புக்குள்ளாவதாகவும் தெரியவந்தது. இதனால் இதை குண்டு வெடிப்பு சம்பவமாக காவல்துறை உறுதி செய்யவில்லை. மேலும், இதுகுறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகையாளர்களிடம் நகர காவல் ஆணையர் ஷாஷி குமார் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், காவல் துறையினர் தங்களது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அதில், ஆட்டோ தீப்பற்றி எரிந்தததற்கு அதில் பயணித்த பயணி கொண்டு வந்த பை தான் காரணமென்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்த விசாரணையை காவல் துறையினரும் தேசியப் புலனாய்வு முகமையும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இதையும் படிங்க: குடியரசு தலைவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது