ETV Bharat / bharat

கர்நாடகாவில் 3 குழந்தைகளுடன் கணவர் தற்கொலை... மனைவியின் வீடியோவால் நடந்த துயரம்... - கர்நாடகாவில் குழந்தைகளுடன் தற்கொலை

கர்நாடகாவில் தனது மனைவி காதலுடன் சென்ற துயரத்தை தாங்க முடியாத கணவர் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka man kills self, poisons 3 children after wife elopes with lover

author img

By

Published : Aug 19, 2022, 12:30 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்த சமியுல்லா என்பவர் நேற்று (ஆகஸ்ட் 18) தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலை அறிந்த துமகுரு போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து துமகுரு போலீசார் தரப்பில், சமியுல்லாவின் மனைவி சாஹிரா பானு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கும் அங்குள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் கணவன் மனைவி போல வாழத் தொடங்கினர். அதனையறிந்த சமியுல்லா, கர்நாடகாவிற்கு வந்துவிடுமாறு பானுவிடம் மன்றாடி கேட்டுக்கொண்டார்.

ஆனால், பானு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனிடையே தனது காதலுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பானு, சமியுல்லாவிற்கு அனுப்பினார். இந்த துயரத்தை தாங்க முடியாத சமியுல்லா தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியா வந்தவுடன் விசாரிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காதலியை கொலை செய்த செய்தியாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.