இந்தி திரைப்படங்களே பெரும்பாலும் இந்திய அளவில் பெரும்பாலான மொழிகளில் டப் செய்து வெளியாகி பெருமளவு வசூலை குவித்து வந்தன. ஆனால் தற்போது தென்னிந்திய படங்களும் இந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் KGF Chapter 2 திரைப்படமும் இணைந்துள்ளது. இதற்கு முன் பாகுபலி படம் இந்தியில் ரூ1,810 கோடி வசூலை பெற்று முதல் இடத்தில் இருந்தது.
தற்போது கன்னட ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியான KGF Chapter 2 திரைப்படம் இந்தி ரசிகர்களிடையே பெரிதும் விரும்பப்பட்ட திரைப்படமாக உள்ளது. இப்படம் ரூ 1,056 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரை விமர்சகர் தாரன் ஆதர்ஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் இந்தி மொழியில் வெளியான டாப் நட்சத்திரங்களின் பட வசூலையும் வரிசைப்படுத்தியிருந்தார்.
நடிகர் பிரபாஸ்ஸின் பாகுபலி-2 இந்தியில் மட்டும் ரூ510.99 கோடி வசூல் செய்திருந்தது. அமீர்கானின் தங்கல் ரூ 387.38 கோடி வசூல் செய்திருந்தது. இந்த வரிசையில் தற்போது KGF Chapter 2 இந்தி மொழியில் ரூ 391.65 கோடி வசூல் செய்து தங்கல் வசூலை முறியடித்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:நடிகர் சாந்தனுவின் இன்ஸ்டாகிராம் பக்கம் விற்பனை?