ETV Bharat / bharat

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம்... மக்கள் குஷி! எங்க தெரியுமா? - Karnataka govt to give money instead of 5 kg rice

அரிசி கொள்முதல் மற்றும் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அன்ன பாக்யா திட்டத்தில் வழங்கப்படும் 5 கிலோ கூடுதல் அரிசிக்கு பதிலாக, கிலோவுக்கு 34 ரூபாய் வீதம் 5 கிலோவுக்கு 170 ரூபாய் பணம் வழங்கும் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

Karnataka
Karnataka
author img

By

Published : Jun 28, 2023, 9:59 PM IST

பெங்களூரு : கர்நாடகாவில் தேவையான அளவுக்கு அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் உறுதி செய்யப்படும் வரை ரேஷன் கடைகளில் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கும் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் தர நிர்ணயத்தின் படி ஒரு கிலோ அரிசிக்கு 34 ரூபாய் வீதம் 5 கிலோ அரிசிக்கு 170 ரூபாய் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே.எச். முனியப்பா தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூடிய நிலையில், இந்த முடிஒவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு வழங்கும் இலவச அரிசி திட்டத்துடன் சேர்த்து அன்ன பாக்யா திட்டத்தில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், மாநிலத்தில் போதிய அளவுக்கு அரிசி கொள்முதல் மற்றும் விநியோக பணிகள் தடைபட்டு உள்ள நிலையில், அன்ன பாக்யா திட்டத்தில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே.எச். முனியப்பா, "ஜூலை 1ஆம் தேதி முதல் அன்ன பாக்யா திட்டத்தில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படுவது அமல்படுத்தப்பட உள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அரசி கொள்முதல் தட்டுப்பாடு காரணமாக ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ அரிசியும் மீதமுள்ள 5 கிலோ அரிசிக்குப் பதிலாக பணமும் வழங்கப்பட உள்ளது.

மேலும் அரிசி கொள்முதல் செய்ய பல்வேறு நிறுவனங்களை அணுகினோம், ஆனால் முடியவில்லை. எனவே வாக்குறுதியை நிறைவேற்ற, இந்த மாற்று தீர்வைச் செய்ய முடிவு செய்து உள்ளோம். ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு நபருக்கு ஒரு கிலோவுக்கு 34 ரூபாய் வீதம் 5 கிலோவுக்கு 170 ரூபாய் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தவிர 5 கிலோ அரிசி எப்போதும் போல வழங்கப்படும்" என்று கூறினார்.

இந்த தொகை இந்திய உணவுக் கழகத்தின் தர நிர்ணயத்தின் படி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்ன பாக்யா திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பதாக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ள நிலையில் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குவதால் ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபாயை வரை இந்த திட்டத்திற்கு செலவாகும் என கூறப்படுகிறது.

அதேபோல் ஒரு குடும்ப அட்டையில் ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் 170 ரூபாய் வழங்கப்படும் என்றும், அதேநேரம் 2 நபர் இருப்பின் 340 ரூபாயும், 5 நபராக இருந்தால் 850 ரூபாயும் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் கே.எச். முனியப்பா தெரிவித்தார். மேலும், ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : உயர் மின்அழுத்த கம்பியில் தேர் உரசி கோர விபத்து... 22 பேர் பலி எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.