மைசூரு : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்- அமைச்சரும், தற்போதைய எதிர்ககட்சி தலைவருமான சித்த ராமையா தனது சொந்த கிராமமான சித்தராமனகுந்தி சித்தராமேஸ்வரா ஜாட்தாவில் வியாழக்கிழமை (மார்ச் 25) பாரம்பரிய நடனம் ஆடினார்.
வீரமக்கள குனிதா நடனம் : முன்னதாக கிராமத்தில் வசிக்கும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை பார்த்து நலம் விசாரித்தார். தொடர்ந்து 40 நிமிடங்கள் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் வீரமக்கள குனிதா (Veeramakkala Kunitha dance) என்ற பாரம்பரிய நடனம் ஆடினார்.
சித்த ராமையா இந்தப் பாரம்பரிய வீரமக்கள குனிதா நடனத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு தாம் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது ஆடினார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் நடனம் ஆடியுள்ளார். சித்த ராமையா நடனம் ஆடியபோது அவரது ஆதரவாளர்கள் சித்த ராமையா மீண்டும் முதல்-அமைச்சர் பொறுப்பேற்பார் என்று கோஷமிட்டனர்.
சித்த ராமையா பேட்டி : இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சித்த ராமையா, “எனது ஊரில் உள்ள குலதெய்வமான சித்த ராமேஸ்வரரை வணங்க வந்துள்ளேன். என் கிராம திருவிழாவை நான் ஒருபோதும் தவறவிட்டது கிடையாது. நான் இதே பகுதியில் நகரில் வசித்தாலும், கிராமத்துடன் எப்போதும் தொடர்பில்தான் இருப்பேன். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும் இது நடந்தது. இந்தத் திருவிழா ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்” என்றார்.
மேலும், “சொந்த கிராமத்துக்கு திருவிழாவில் பங்கெடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை உற்சாகத்தை அளிக்கிறது. நான் வீரமக்கள குனிதா நடனம் ஆடினேன். இந்த நடனம் என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்தது” என்றார்.
இதையும் படிங்க : ராகுல் காந்தி வா.. தலைமை ஏற்க வா.. சித்த ராமையா அழைப்பு!