கர்நாடகா: கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன்குமார் கடந்த 26ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதேபோல் கடந்த வாரம், புலம்பெயர்ந்த தொழிலாளி மசூத் கொல்லப்பட்டார். கடந்த 28ஆம் தேதி இரவு, தக்ஷின கன்னடா மாவட்டத்தில் இஸ்லாமிய இளைஞர் முகமது ஃபாசில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் தொடரும் கொலை சம்பவங்களால் மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. அண்மையில் மூன்று கொலைகள் நடந்துள்ள நிலையில், இஸ்லாமியர்களின் கொலை வழக்கை காட்டிலும், பாஜக நிர்வாகி கொலை வழக்கிற்கு மட்டுமே கர்நாடக அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பாஜக பிரமுகரின் குடும்ப உறுப்பினர்களை மட்டும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பாஜக ஒரு தேசியக் கட்சி, அது யாரிடமும் பாகுபாடு காட்டாது என்று கூறினார். பிரவீன் கொலை தொடர்பான பாஜகவினரின் போராட்டம் தணிந்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை போலீசார் பிடிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்!