ETV Bharat / bharat

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: காங். 3ஆம் கட்ட பட்டியல் வெளியீடு.. லட்சுமண் சவதிக்கு அதானி தொகுதி!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3ம் கட்ட வேட்பாளரை பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. லட்சுமண் சவதிக்கு அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சித்தராமையாவுக்கு கோலார் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

Karnataka election
கர்நாடகா தேர்தல்
author img

By

Published : Apr 15, 2023, 9:16 PM IST

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி 124 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. ஏப்ரல் 6ம் தேதி 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 2ம் கட்ட பட்டியல் வெளியானது. இந்நிலையில், 43 வேட்பாளர்களை கொண்ட 3ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண் சவதிக்கு, அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்த சிவலிங்கே கவுடாவுக்கு அர்சிகெரா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3ம் கட்ட பட்டியலில் 16 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான சித்தராமையாவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே அவருக்கு வருணா தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கோலார் தொகுதியிலும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருக்கு 2 தொகுதிகளை ஒதுக்க கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோலார் தொகுதியில் கொதூர் ஜி.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். சித்தராமையா தற்போது பாகல்கோட் மாவட்டம் பதாமி தொகுதிக்கு எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் போட்டியிடும் ஷிகோன் சட்டமன்ற தொகுதிக்கு, காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜய் குல்கர்னியை களம் இறக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 2024ம் ஆண்டு மத்தியில் பிஆர்எஸ் ஆட்சி அமையும்-சந்திரசேகர ராவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.