பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் உள்ள சாமராஜாநகர் கிழக்கு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரவிக்குமார், கடந்த 6-ம் தேதி பேகுரு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அடுத்த நாளே (மே 7), பேகுருவிலிருந்து குண்ட்லுபேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மே 11-ம் தேதி, குண்ட்லுபேட்டை காவல் நிலையத்திலிருந்து, குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த மூன்று இடமாற்றங்களிலும், சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பணிக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. காவல் துறை ஆய்வாளர் 7 நாட்களில் மூன்று முறை இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. காவல் துறையின் உள்விவகாரம் என்பதால், இதுதொடர்பாக அலுவலர்கள் யாரும் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: இந்தி திணிப்பு: ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற விசிகவினர் கைது