பெங்களூரு: கர்நாடகாவின் துமகுரு மாவட்டம் தோகரி கட்டா கிராமத்தில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் தொடர்ந்து பாம்புகளால் தாக்கப்பட்டுவந்துள்ளனர். சுமார் 25 ஆண்டுகளாக தொடரும் இந்த விசித்திர சம்பவத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கோவிந்தராஜூ என்பவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார். இந்த பாம்பு கடி சம்பவங்கள் அந்த குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய நிலத்தில் விவசாய பணிகள் பார்க்கும்போது நடந்துள்ளன. இதனால் விவசாய பணிகளுக்கு செல்லவே அந்த குடும்ப உறுப்பினர்கள் அச்சப்படுகின்றனர். இதனையறிந்த அந்த கிராம மக்களும் அவர்களது நிலைத்தில் விவசாய பணிகளுக்கு வர மறுக்கின்றனர்.
இதுகுறித்து கோவிந்தராஜூவின் மனைவி கமலம்மா கூறுகையில், "எங்களது குடும்ப உறுப்பினர்கள், தொடர்ந்து பாம்புகடியால் உயிரிழந்துவருகின்றனர். இதனை ஊர் மக்களும் ஏதோ சாபமாக பார்க்கின்றனர். ஆகவே, எங்களது வயலில் சுற்றித்திரியும் பாம்புகளை நிரந்தரமாக அகற்ற அரசோ, மாவட்ட நிர்வாகமோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: 35,000 பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்