புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் திருபட்டினத்தில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி ஆட்சியின்போது பல கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை போடப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
இச்சாலையை வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணிகள் பிரதானமாகப் பயன்படுத்திவருகின்றனர்.
தற்போது இந்தச் சாலையில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு சிறு, சிறு குளம்போல் காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து புறவழிச்சாலையை மீண்டும் மறு சீரமைப்பு செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்