ETV Bharat / bharat

UP Kanwar Yatra: கன்வார் யாத்திரை சென்ற வாகனத்தின் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு! - சிகிச்சை

கன்வார் புனித யாத்திரையை முடித்து விட்டு ஹரித்துவார் திரும்பிக் கொண்டு இருந்த பக்தர்களின் வாகனம், உயர் மின் அழுத்த கம்பி உடன் உரசியதில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 Kanwariyas electrocuted to death, 5 others injured in UP's Meerut village
சிவ பக்தர்கள் சென்ற வாகனம் மின்கம்பி உடன் உரசி 5 பேர் உயிரிழப்பு - உ.பி.,யில் சோகம்!
author img

By

Published : Jul 16, 2023, 9:44 AM IST

மீரட் (உத்தரப்பிரதேசம்): வடமாநிலங்களில், ஷிரவன் மாதத்தை ஒட்டி, சிவ பக்தர்களால் கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 5க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள், கன்வாரி யாத்திரையை முடித்து விட்டு, கங்கை நதியில் புனித நீரை சேகரிக்கும் பொருட்டு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு தங்களது வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அவர்களது வாகனம், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பவன்பூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, தாழ்வாக தொங்கிக் கொண்டு இருந்த உயர் மின் அழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக வாகனம் உரசி உள்ளது. இந்த சம்பவத்தில், மின்சாரம் தாக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 5 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மீரட் மாவட்டத்தின் ராலி சவுகான் கிராமத்தில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உயர் மின் அழுத்த கம்பி தாழ்வாக தொங்கிக் கொண்டு இருப்பதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்து உள்ளனர். இந்த விவகாரத்தில், மின்சாரத் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததை கண்டித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி இருந்தனர். இந்த நிலையில், இந்த உயர் மின் அழுத்த கம்பி உரசி 5 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து மீரட் மாவட்ட மேஜிஸ்திரேட் தீபக் மீனா கூறியதாவது, “பக்தர்கள் பயணித்த வாகனம், 11 கிலோ வோல்ட் திறன் மின்சாரம் பாயும் உயர் மின்சார் கம்பியில் எதிர்பாராத விதமாக உரசி உள்ளது. இதன் காரணமாக மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடலூர் தேயிலைத் தோட்டத்தில் அணிவகுத்த யானைகள்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.