கர்நாடகா: குடகு மாவட்டத்தின் குஷால நகரைச் சேர்ந்தவர் சௌஜன்யா. இவர் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் கன்னட சின்னத்திரை தொடரில் நடித்து ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர்.
![suicide kannada actress soujanya commits suicide kannada actress soujanya commits suicide kannada actress commits suicide கன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை தூக்கிட்டு தற்கொலை தற்கொலை சௌஜன்யா நடிகை சௌஜன்யா தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13220421_suicide.jpg)
சின்னத்திரை தொடர் மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கன்னடா திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
![suicide kannada actress soujanya commits suicide kannada actress soujanya commits suicide kannada actress commits suicide கன்னட நடிகை தூக்கிட்டு தற்கொலை தூக்கிட்டு தற்கொலை தற்கொலை சௌஜன்யா நடிகை சௌஜன்யா தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13220421_soujanya.jpg)
இதையும் படிங்க: லாரி கவிழ்ந்து விபத்து: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு