ETV Bharat / bharat

Karnataka election: நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா காங்கிரஸில் இணைந்தார் - மது பங்காரப்பா

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளார். இவர் சொரப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது சகோதரர் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார்.

Kannada
காங்கிரஸ்
author img

By

Published : Apr 28, 2023, 7:06 PM IST

கர்நாடகா: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் பாஜகவின் வாக்கு வங்கியை குறிவைத்து காலி செய்யும் நோக்கில் காங்கிஸும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு லிங்காயத்துகளிடம் உள்ள ஆதரவைக் குறைக்கும் வகையில் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.
காங்கிரஸுக்கு வலு சேர்க்கும் வகையில், ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட லிங்காயத் சமூகத் தலைவர்கள் இருவர் பாஜகவிலிருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப், நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் இன்று(ஏப்.28) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். அப்போது, கீதா சிவராஜ்குமாரின் சகோதரர் மது பங்காரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கீதா சிவராஜ்குமார், "எனது சகோதரர் இருக்கும் இடத்திலெல்லாம் நானும் இருப்பேன். நாளை முதல் எனது சகோதரர் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். சில இடங்களில் எனது கணவரும் பிரசாரம் செய்வார். காங்கிரஸ் கட்சியில் இணைவது மிக்க மகிழ்ச்சி. சகோதரர் போட்டியிடும் சொரப் தொகுதியில் எனது கணவர் சிவராஜ்குமார் பிரசாரம் செய்வார்" என்று கூறினார்.

அப்போது பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே.சிவக்குமார், "மது பங்காரப்பாவைத் தொடர்ந்து, அவரது சகோதரி கீதா காங்கிரஸில் இணைந்திருக்கிறார். இது மிகவும் நல்ல நாள்" என்று கூறினார்.

அப்போது நடிகர் சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டிகே.சிவக்குமார், "நடிகர் சுதீப் மற்றும் நடிகர் தர்ஷன் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. நட்பின் காரணமாக பிரசாரம் செய்கிறார்கள்" என்றார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகனான மது பங்காரப்பா, சுமார் ஓராண்டுக்கு முன்பு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் சொரப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல், கீதா சிவராஜ்குமாரும், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவமோகா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக லிங்காயத்துகளை திரட்டும் காங்கிரஸ் - பாஜக எடுத்த அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.