ETV Bharat / bharat

காங்கிரசில் இணையும் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி

சிபிஐ கட்சியின் இளம் தலைவரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான கன்னையா குமார், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் இன்று(செப். 28) ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையவுள்ளனர்.

Kanhaiya Kumar and Jignesh Mevani to join Congress today
காங்கிரஸில் இணையும் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி
author img

By

Published : Sep 28, 2021, 1:39 PM IST

Updated : Sep 28, 2021, 1:56 PM IST

டெல்லி: 2025ஆம் ஆண்டு பிகார் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஓர் அங்கமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத்தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கன்னையா குமார் இன்று காங்கிரசில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார்.

டெல்லி பகத்சிங் பூங்காவில் உள்ள பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, மாலை மூன்று மணியளவில் காங்கிரசில் இணையும் கன்னையா குமார், அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இவருடன், குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் இணையவுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டபோது, ஜிக்னேஷ் மேவானியும், கன்னையா குமாரும் அதனை வரவேற்றுப் பேசியிருந்தது, இவர்களின் இணைவு, குஜராத், பிகாரிலுள் பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற உதவும் என காங்கிரஸ் கட்சி கருதுவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் தேவை - சசி தரூர் குரல்

Last Updated : Sep 28, 2021, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.