சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கமல் ஹாசன் இன்னும் மருத்துவமனையில்தான் உள்ளார். நலமுடன் உள்ளார்; விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 730 பேருக்கு கரோனா பாதிப்பு