ETV Bharat / bharat

கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கே சுதாகரன் நியமனம்! - குஞ்சாலிகுட்டி

காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

K Sudhakaran appointed as KPCC president  கேரள காங்கிரஸ் தலைவர்  கே சுதாகரன்  ராகுல் காந்தி  காங்கிரஸ்  உம்மண் சாண்டி  குஞ்சாலிகுட்டி  முஸ்லிம் லீக்

author img

By

Published : Jun 8, 2021, 10:14 PM IST

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக ராகுல் காந்தி என்னை நியமித்துள்ளார் என்ற தகவலை பெற்றேன். அத்துடன் பதவியையும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன் என கே சுதாகரன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே சுதாகரன், கண்ணூர் மக்களவை தொகுதி எம்பி ஆவார். அவருடன் கே சுரேஷ், பிடி தாமஸ் மற்றும் டி சித்திக் ஆகியோரும் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கே சுதாகரன் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் முயற்சியில் என் மீது நம்பிக்கை வைத்து ராகுல் காந்தி எனக்கு வாய்ப்பளித்துள்ளார். நான் நிச்சயமாக அவரின் எண்ணத்தை செயல்படுத்தி காட்டுவேன். காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொருட்டும், வலிமைப்படுத்தவும் நான் அனைவருடனும் நட்பு பாராட்டி நடந்துகொள்வேன். நான் உறுதியாக கூறுகிறேன், காங்கிரஸ் அடுத்த 6 மாதத்தில் மீளும். நம் மக்களும் இதற்காகதான் காத்திருக்கின்றனர்” என்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் முஸ்லிம் லீக் தலைவர் பிகே குஞ்சாலிகுட்டி, “காங்கிரஸை வலிமைப்படுத்தும் தகுதி கே சுதாகரனிடம் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: அமராவதி பெண் எம்பி சாதி சான்றிதழ் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.