ETV Bharat / bharat

"2019ல் காங்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா முக்கிய காரணம்" - கே.சுதாகர் பரபரப்பு குற்றச்சாட்டு! - கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையா முக்கிய காரணமாக இருந்தார் என முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான கே.சுதாகர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Siddaramaiah
கர்நாடகா
author img

By

Published : May 17, 2023, 1:27 PM IST

கர்நாடகா: கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்று தீர்மானிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த டி.கே.சிவக்குமார்தான் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், கட்சியின் மூத்த தலைவரும் 9 முறை எம்எல்ஏவாக தேர்வானவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அடுத்த முதல்வராக வர வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சர் யார்? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனை டெல்லியில் நடைபெற்று வருகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் டெல்லி சென்று கட்சியின் உயர்மட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். நேற்று (மே.16) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இருவரும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். கட்சிக்காக தாங்கள் ஆற்றிய பணிகளை எடுத்துக்கூறி, முதலமைச்சர் பதவியை கோரியதாக தெரிகிறது. ஆனால், இருவரும் முதலமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக இருவரும் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான கே.சுதாகர், சித்தராமையா மீது பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு சித்தராமையா முக்கிய காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

  • Ultimately some of us had to inevitably quit Congress and go back to the people in bypolls, to protect the karyakartas and supporters in our constituencies.

    Can Shri Siddaramaiah deny the fact that he had no role, implicitly or explicitly, in this move by Congress MLAs?

    3/3

    — Dr Sudhakar K (@mla_sudhakar) May 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "கடந்த 2018ஆம் ஆண்டு காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியின்போது, எம்எல்ஏக்கள் தங்களது குறைகளை சித்தராமையாவிடம் கூறும்போது, தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கூறிவிடுவார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் வரை அவர் காத்திருந்தார். அதன் பிறகு, குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி ஒரு நாள் கூட தொடர்வதை சித்தராமையா விரும்பவில்லை. அதனால், ஆட்சியைக் கவிழ்ப்பதில் குறியாக இருந்தார். இறுதியில் எங்களில் சிலர் வேறு வழியில்லாமல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, இடைத்தேர்தலை சந்தித்து எங்களது தொகுதியை பாதுகாக்க வேண்டியிருந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்றதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என சித்தராமையாவால் மறுக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்களில் சுதாகரும் ஒருவர். தற்போது முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற போட்டி நிலவுவதால், இந்த சூழலைப் பயன்படுத்தி கலகத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக கன்னாபிடியோல் மருந்து கரைசலுக்கு CDSCO அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.