மேஷம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் தனிமைப் படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். உறவுகளை பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்சினைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.
மிதுனம்
கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்
இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு சிறந்த நாளாகும். இன்றைய தினத்தில், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்
விற்பனைத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாட்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.
கன்னி
தினசரி பணிகளிலிருந்து செல்வது விலகி, உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
துலாம்
நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீதும், குடும்ப விவகாரங்களின் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வீட்டின் அலங்காரத்தை மாற்றி புதுப்பிக்க விருப்பம் இருக்கும். வீட்டிற்கான புதிய பொருள்களை வாங்குவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்
நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுவருகிறீர்கள். உங்களது உடல் நல பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.
தனுசு
இன்று உங்களுக்கு அனைத்து தரப்பிலும் வெற்றி கிடைக்கும். எந்தச் சவால்களை எடுத்துக் கொண்டாலும் நீங்கள் அதை வெற்றி கொள்வீர்கள். உங்களிடம் ஆலோசனை கேட்கும், சக பணியாளர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுவீர்கள். உங்களது தலைமை அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். நீங்கள் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம்
உணர்வுரீதியாக செயல்படுவது, பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ஆகிய இரண்டையும் பாதிக்கும். இதைப் பயன்படுத்தி, உங்களை சுற்றி இருப்பவர்கள், உங்களை வீழ்த்த முயற்சி செய்யலாம். அதனால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, வெற்றிக்கான பாதையில் முன்னேறி செல்லவும்.
கும்பம்
இன்று போட்டியாளர்கள், உங்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்வார்கள். அதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களது திறமையான செயல்பாட்டின் காரணமாக, அனைத்து பிரச்சினைகளும் காணாமல் போகும். உங்களது வெற்றி, கருணை மற்றும் கடின உழைப்பின் காரணமாக, அனைவரின் மனதையும் வெல்வீர்கள்.
மீனம்
இன்று நீங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். கேள்விகளுக்கான பதில்களை பெற, உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்வீர்கள். உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருந்த பணிகள் முடிக்கப்படும். அறிவார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தவும். பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
இதையும் படிங்க: போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பு அன்பளிப்பு வழங்கி அசத்திய ஜோ பைடன்!