டெல்லி: ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சட்ட விரோதப்பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன்கோரி டெல்லி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மாவட்ட கீழமை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
ஜாமீன் மனு மீது தீர்ப்பளிப்பதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றம் கோரியது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்த முதன்மை நீதிமன்றம், சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனு மீது தீர்ப்பளிக்க கூடுதலாக கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. மேலும், நிலுவையில் உள்ள வாதங்களை நவம்பர் 11ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:கருவைக் கலைக்க அப்பாவி இளைஞரை சிக்கவைத்து நாடகம்:இளம்பெண் உள்பட 3 பேருக்கு சிறை!