ETV Bharat / bharat

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராணா அயூப் மனு!

வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர் ராணா அயூப், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Rana Ayyub
Rana Ayyub
author img

By

Published : Mar 31, 2022, 2:00 PM IST

புது டெல்லி : பத்திரிகையாளர் ராணா அயூப், தாக்கல் செய்துள்ள அவசர மனு டெல்லி தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி நவீன் சௌலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ராணா அயூப் (Rana Ayyub) தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவசர மனு அளித்துள்ளார்.

இந்த அவசர மனு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி, நீதிபதி நவீன் செளலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (ஏப்.1) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

பத்திரிகையாளர் ராணா அயூப், டெல்லி செல்ல மும்பை விமான நிலையம் சென்ற போது செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) குடியுரிமை அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். ராணா அயூப் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் குடியுரிமை அலுவலர்கள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

இது குறித்து ராணா அயூப், “நான் வெளிநாட்டில் சில நிகழ்ச்சிகளுக்காக திட்டமிட்டிருந்தேன். இந்நிலையில், எனக்கு மின்னஞ்சல் வழியான அமலாக்கத்துறை அலுவலர்கள் சம்மன் (அழைப்பாணை) அனுப்பியிருந்தனர். தொடர்ந்து, நான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ராணா அயூப் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் பிப்ரவரி மாதம் அவரது ரூ.1.77 கோடி சொத்துகளை முடக்கினர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.