ETV Bharat / bharat

ஜோஷிமத் போன்ற பேரழிவு மீண்டும் ஏற்பட வாய்ப்பு - மத்திய இணை அமைச்சர் தகவல்

author img

By

Published : Jan 14, 2023, 1:57 PM IST

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ஜோஷிமத் நிகழ்வு போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார்.

ஜோஷிமத் போன்ற பேரழிவு மீண்டும் ஏற்பட வாய்ப்பு - மத்திய அமைச்சர் அஜய் பட்

உத்தரகாண்ட்: நைனிடால் நகருக்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது குறித்தும் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் நைனிடாலில் நிலச்சரிவுகள் குறித்து மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது நைனிடால் லோயர் மால் சாலையில் கடந்த பல வருடங்களாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை முக்கியப் பிரச்னையாக எடுத்துரைத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டார். மேலும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை நிரந்தரமாக சரி செய்வது தொடர்பான செயல் திட்டத்தை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டைக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வரும் விரிசல்களை சரி செய்வது குறித்தும் பேசினார். நிலச்சரிவு பாதித்த ஜோஷிமத் பகுதியில் மத்திய அரசு ஆய்வு நடத்தி வருவதாகவும், அந்த ஆய்வு நிலச்சரிவு காரணங்களை ஊகிக்க உதவும் என்றும், விஞ்ஞானிகளின் முந்தைய ஆய்வு மற்றும் புதிய ஆய்வின் அடிப்படையில் இப்பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பட் கூறினார்.

மேலும் ஜோஷிமத்தில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்து பேசிய பட், ஜோஷிமத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரகாண்ட் மத்திய மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு சம்பவம் குறித்து தகவல்களைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்து வருகிறார். மேலும் நைனிடாலின் பல்லியா நாலா மற்றும் சைனா பீக் மலையில் நீண்ட காலமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையும் அவர் கண்காணித்து வருகிறார் என்றார்.

6,000 அடி உயரத்தில் சாமோலி மலையில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் 2021ஆம் ஆண்டிலிருந்து வீடுகளில் விரிசல் மற்றும் சேதங்கள் ஏற்படத் தொடங்கின. சமோலியில் நிலச்சரிவுக்குப் பிறகு 2021இல் விரிசல்கள் ஏற்பட்டதாக முதல் அறிக்கைகள் வந்ததிலிருந்து, 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.