அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
அந்த வகையில், குஜராத்தின் சௌராஷ்டிராவில் இன்று (ஆக. 1) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது கெஜ்ரிவால் பேசுகையில், குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும். குறிப்பாக 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
முன்னதாக, ஜூலை 21ஆம் தேதி சூரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டண தொகை தள்ளுபடி செய்யப்படும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்... அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி...