ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரம் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்திலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
பயங்கரவாதிகள் ட்ரோன் போன்ற நவீனக் கருவிகளை தங்கள் தாங்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தத்தொடங்கியது பாதுகாப்புப்படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ட்ரோன் விற்பனைக்குத் தடை
அதன்படி, ஸ்ரீநகரில் ட்ரோன், அதுபோன்ற உபகரணங்களை சேகரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ முழுமையாக தடைவித்து மாவட்ட ஆட்சியர் முகமது அய்ஜாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட காவல் துறை இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் 64 திருத்தங்கள் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை