ETV Bharat / bharat

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஜிதேந்திர அவ்ஹாத் நியமனம்... தலைமை கொறடா யார் தெரியுமா? - Jitendra Awhad Maharashtra Opposition party leader

மராட்டிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை கொறடாவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜிதேந்திர அவ்ஹாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Jitendra Awhad
Jitendra Awhad
author img

By

Published : Jul 2, 2023, 7:42 PM IST

மும்பை : மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து மகாரஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

துணை முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜிதேந்திர அவ்ஹாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாடீல், "மகாரஷ்டிர சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத் நியமிக்கப்பட்டு உள்ளார்" என்றார். இதுகுறித்து பேசிய ஜிதேந்திர அவ்ஹாத், மராட்டிய சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை கொறாடாவாக கட்சித் தலைமை தன்னை நியமித்து உள்ளதாக கூறினார்.

மேலும், அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை மிரட்டல்களை தவிர எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவலுக்கு வேறு முக்கிய காரணம் இருக்காது என ஜிதேந்திர அவ்ஹாத் தெரிவித்தார். மேலும் 25 ஆண்டுகளாக தங்களை அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் வைத்து பார்த்த கட்சியை உதறித் தள்ளிவிட்டு சென்றதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக - சிவசேனாவுடன் கூட்டணி அமைத்த அஜித் பவார் கடந்த மூன்று ஆண்டுகளில் 3வது முறையாக துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அஜித் பவாரும் துணை முதலமைச்சராக பதவியேற்று உள்ளதால் மாநிலத்தில் துணை முதலமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்து உள்ளது. மேலும் மராட்டிய அரசியல் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதலமைச்சர்கள் அங்கம் வகிப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் ட்ரிபிள் என்ஜின் ஆட்சி... முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.