ETV Bharat / bharat

ஒரு தலைக் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் தற்கொலை! - புதுடெல்லி

ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் பெண்ணின் கழுத்தை அறுத்து, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

JILTED LOVER SLITS GIRLS THROAT THEN COMMITS SUICIDE IN DELHI

author img

By

Published : Jun 3, 2023, 9:53 PM IST

புதுடெல்லி: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லி ரோஹினி மாவட்டத்தில் நடந்து உள்ளது.

ஜேஜே காலனி பகுதியைச் சேர்ந்தவர் அமித் கிராந்தி. 20 வயதான அமித் கிராந்தி, தன் சகோதரியுடன் பணிபுரியும் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் மறுத்ததால் ஆத்திரம் அடைந்து, அப்பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அமித் கிராந்தியின் அக்கா கண்காட்சிகளில் ஸ்டால்கள் வடிவமைப்பதற்கு ஒப்பந்தங்கள் பெற்று வருகிறார். அமித் கிராந்தி அவரது அக்காவை ரோஹினி செக்டார் 24இல் உள்ள அவரது அலுவலத்தில் தினமும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார்.

அமித் கிராந்தியின் அக்கா அலுவலகத்தில் அவர் உட்பட மேலும் நான்கு பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அமித் கிராந்தி அவர் அக்கா உடன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம், அவரை காதலிக்கும் படி அடிக்கடி வற்புறுத்தி வந்து உள்ளார். ஆனாலும் அப்பெண் அமித் கிராந்தியை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமித் கிராந்தி அந்த இளம்பெண்ணை பழி வாங்குவதற்கு முடிவு எடுத்துள்ளார். நேற்று (ஜூன் 2) மதியம் அலுவலகம் சென்ற அமித் கிராந்தி அப்பெண்ணிடம் தன்னை காதலிக்கும் படி மீண்டும் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அப்பெண் மறுத்த நிலையில் ஆத்திரத்தில் சமையலறைக்கு ஓடிச் சென்றவர், அங்கு அலமாரியில் இருந்த கத்தியை எடுத்து வந்து அப்பெண்ணின் கழுத்தை அறுத்து உள்ளார்.

அமித் கிராந்தின் செயலைக் கண்ட அலுவலகத்தில் இருந்த பிற ஊழியர்கள் அவரைத் தடுத்து உள்ளனர். திடீரென நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அலுவலகத்தின் தரை தளத்திற்கு ஓடிச் சென்ற அமித், அங்கிருந்த அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து உள்ளார்.

பின்னர் அலுவலக ஊழியர்கள் இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்சிற்கும், போலீசாருக்கும் தகவல் அளித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது அமித் உயிரற்று கிடந்து உள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்து அறுக்கப்பட்ட இளம் பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளதாகவும், சிகிச்சையில் உள்ள இளம்பெண்ணின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவி... வீட்டுக்கு சென்ற சிசோடியா ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.