ETV Bharat / bharat

ஜார்கண்ட் கேபிள் கார் விபத்து மீட்புப் பணி முடிந்தது - ஜார்கண்ட் கேபிள் கார் விபத்து

ஜார்கண்ட் மாநிலம் கேபிள் கார் விபத்து மீட்புப் பணிகள் முடிந்ததாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Jharkhand Trikut ropeway mishap
Jharkhand Trikut ropeway mishap
author img

By

Published : Apr 12, 2022, 3:13 PM IST

Updated : Apr 12, 2022, 5:28 PM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் திரிகுட் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் (ஏப். 10) 1,286 அடி உயரத்தில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு கேபிள் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.

19 கேபிள் கார்களில் 48 பேர் அந்தரத்திலேயே சிக்கினர். இவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்டனர். இந்த மீட்புப்பணி இரண்டு நாள்களாக நீடித்தது. நேற்றுவரை 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் நள்ளிரவு மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று (ஏப். 12) காலை தொடங்கியது. சுமார் 2 மணியளவில் மீதமுள்ள 15 பேரும் மீட்கப்பட்டனர். அதன்படி மீட்புப்பணி முழுவதும் முடிந்ததாக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

அந்த வகையில் மொத்தமாக 47 பேர் மீட்கப்பட்டனர். இதனிடையே நேற்று(ஏப்.11) கேபிள் காரிலிருந்து கயிறுகட்டி மீட்கப்படும்போது பயணி ஒருவர் நடுவானிலிருந்து கீழே தவறி விழுந்து, உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதையும் படிங்க: நடுவானில் மீட்புப்பணி... ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த பயணி...

Last Updated : Apr 12, 2022, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.