ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், தன்வார் நகர் அருகே உள்ள பஞ்ச்கரோ அணையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 10 பேரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவலளித்தனர். சம்பவ இடத்துக்குச்சென்ற மீட்புப்படையினர் இருவரைப் பத்திரமாகமீட்டனர். மாயமான மேலும் 8 பேரைத்தேடி வருகின்றனர்.
மாயமான அனைவரும் தன்வார் நகரைச்சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:தொழில் நுட்பக் கோளாறு - பாகிஸ்தானில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்!