ராஞ்சி : பொது இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் ராஞ்சியில் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஆல்பர்ட் எக்கா சௌக் பகுதியில் திங்கள்கிழமை (செப்.6) நள்ளிரவு வனக் காவலர் ஹாமிஸ் டங்டங் (Harnius Dungdung) மது போதையில் சுற்றித் திரிந்தார்.
இந்நிலையில் அங்கிருந்தவர்களை பார்த்து ஆபாச செய்கைகள் செய்தார். மேலும், அங்கு பழ வியாபாரம் செய்யும் பெண்களை பார்த்து தனது பேண்ட் ஜிப்பை கழட்டி ஆபாசமாக நடந்துகொண்டார்.
இதைப் பார்த்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து காவலர் ஹாமிஸ் டங்டங் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் நிலைகுலைந்த ஹாமிஸ் கீழே விழுந்தார். இது குறித்து அறிந்ததும் அங்கிருந்த காவலர்கள் ஹாமிசை மீட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோட்வாலி (Kotwali ) காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சுரேந்திரா குமார் கூறுகையில், “ஹாமிஸ் டங்டங் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் காவல் நிலையத்திலும் தகராறில் ஈடுபட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
பொது இடத்தில் மது மயக்கத்தில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வனக் காவலரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : வெறுப்பு பரப்புரை; முதலமைச்சர் தந்தைக்கு நீதிமன்ற காவல்!