ஐஐடி கல்வி நிறுவனங்களுக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு தேதியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நான்காம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். முதலில் இந்தத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
இதற்கு முன்னதாக மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20 முதல் 25ஆம் தேதிவரை நடைபெறுவதால், மூன்றாம் கட்டத் தேர்வுக்கும் நான்காம் கட்டத் தேர்வுக்கும் குறைந்தது ஒரு மாத காலமாவது இடைவெளி தேவை. இதையடுத்து இந்தத் தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 7 லட்சத்து 32 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நான்காம் கட்டத் தேர்வுக்காக பதிவுச் செய்துள்ளனர். இந்தத் தேர்வானது தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி