ஹைதராபாத்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவு அளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதர்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 95.8% பேர்கள் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய தேர்வு முகமையால் (NTI) நடத்தப்படும் ஜேஇஇ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், நாட்டில் உள்ள என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேரலாம். அதே நேரம் முதல் நிலை தேரிவில் தேர்ச்சி பெற்று முதல் 2.5 லட்சம் இடத்தை பெறுபவர்கள், ஐ.ஐ.டி.யால் நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்கும் தகுதியை பெற்று, ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கான வாய்ப்பை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதானி குழும விவகாரம்; காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் எனத் தகவல்!