ETV Bharat / bharat

நடிகை, எம்.பி. ஜெயா பச்சனுக்கு கோவிட் பாதிப்பு

பிரபல நடிகையும் எம்.பியுமான ஜெயா பச்சனுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்
author img

By

Published : Feb 4, 2022, 3:12 PM IST

பிரபல நடிகையும், பாலிவுட் ஜாம்பவான் அமித்தாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கரன் ஜோஹர் இயக்கத்தில் அவுர் ராணி கி பிரேம் கஹானி என திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

டெல்லியில் படப்படிப்பு நடைபெற்றுவரும் நிலையில், அவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் உள்ளார். கடந்தாண்டு கோவிட் முதல் அலையின் போது அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் என ஜெய பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. நடிகையான ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பங்குச்சந்தையில் ஆட்டம் கண்ட பேஸ்புக் நிறுவனம் - அம்பானி, அதானியை விட கீழே இறங்கிய மார்க்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.