ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எரிசக்தி, நீர்வள மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் தனிநபருக்கு சராசரியாக 5,000 லிட்டர் நீர் கிடைத்திருந்த நிலையில், தற்போது அது 1,100 லிட்டராக குறைந்துவிட்டது.
இதற்கு மக்கள்தொகை வளர்ச்சி உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன. நீர்வளத்தின் 85 விழுக்காடு பயன்பாடு வேளாண்மை தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அங்கிருந்தே நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடங்க வேண்டும்.
சொட்டுநீர் பாசனம், தெளிப்பு பாசனம் போன்ற நவீன முறைகளை வேளாண்மையில் அதிகம் பயன்படுத்த வேண்டும். நதிகளின் நீளமும் குறைந்த நிலையில், நதி நீர் இணைப்பில் அரசு கவனம் செலுத்திவருகிறது. 15,000 சதுர கி.மீ. பரப்பில் மரங்களை கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு நட்டுள்ளது. நீர் மேலாண்மைக்கு இந்த அரசு கூடுதல் முக்கியத்துவம் தருகிறது என்றார்.
இதையும் படிங்க: வெளிநாட்டினருக்கான இந்திய விசா காலம்: ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும்!