ETV Bharat / bharat

"இந்தியாவை வெறுத்துவிட முடியாது" - பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பான் இளம்பெண் விளக்கம்!

டெல்லியில் ஹோலிப் பண்டிகையின்போது இளைஞர்கள் அத்துமீறிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக இருப்பதாகவும், இது போன்ற ஒரு சம்பவத்தால் இந்தியாவை வெறுக்க முடியாது என்றும், இந்தியா அற்புதமான நாடு என்றும் தெரிவித்துள்ளார்.

japanese-
japanese-
author img

By

Published : Mar 12, 2023, 2:26 PM IST

டெல்லி: டெல்லியில் கடந்த 8ஆம் தேதி நடந்த ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தில், ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் மீது இந்திய இளைஞர்கள் சிலர் கலர் பொடியைத் தூவினர், அப்பெண்ணின் தலையில் முட்டையை உடைத்து அநாகரீகமாக நடந்து கொண்டனர். அந்த பெண் அசெளகரியமாக உணர்வதுபோல காணப்பட்டார். இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

வீடியோ வைரலானதையடுத்து, சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். பிறகு வீடியோவில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்ட போலீசார், மூவரை கைது செய்தனர். அதில் ஒருவர் சிறுவர் என தெரிகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஜப்பான் இளம்பெண் தான் ட்வீட் செய்திருந்த வீடியோவை நீக்கிவிட்டார். மேலும், வீடியோவை நீக்கியது குறித்தும், ஹோலி அன்று நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், "நான் மார்ச் 9ஆம் தேதி ஹோலி அன்று தனக்து நடந்த சம்பவம் பற்றி வீடியோவை பகிர்ந்திருந்தேன். அந்த வீடியோவுக்கு வந்த ரெஸ்பான்ஸ் எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பலரும் ரீட்வீட் செய்தும், கமென்ட் செய்தும், தனிப்பட்ட முறையிலும் குறுஞ்செய்தி அனுப்பினர். இந்திய இளைஞர்களால் பாதிக்கப்பட்ட என்னிடம் பல இந்தியர்கள் மனிப்புக்கோரினர். இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான கமென்ட்டுகளைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். அதனால்தான் வீடியோவை நீக்கினேன்.

இந்தியாவில் ஹோலிப் பண்டிகை அன்று ஒரு பெண் தனியாக வெளியே செல்வது மிகவும் ஆபத்து என்று கேள்விப்பட்டேன். அதனால், நான் எனது 35 நண்பர்களுடன் ஹோலிப் பண்டிகையில் கலந்து கொண்டேன், ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிவிட்டது.

அந்த வீடியோ தற்செயலாக எடுக்கப்பட்டது, யாரையும் குற்றம்சாட்டுவதற்காக அல்ல. இந்தியாவில் ஹோலிப்பண்டிகையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறது என்று குற்றம் சாட்டுவதற்காக அந்த வீடியோவை பதிவிடவில்லை. அந்த சம்பவத்தின்போது அங்கிருந்த இளைஞர்கள் எங்களுக்கு உதவினார்கள். அதை உங்களால் அந்த வீடியோவில் பார்த்திருக்க முடியாது.

ஹோலிப் பண்டிகை ஒரு அற்புதமான மற்றும் வேடிக்கையான பாரம்பரிய பண்டிகை. இதன் நோக்கம் வசந்த காலத்தின் வருகையை ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகள் மற்றும் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவது. எனது வீடியோ மற்றும் ட்வீட் பலரிடமும் கவலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் நேர்மறையான அம்சங்களையும், அதன் கொண்டாட்டங்களையும் எடுத்துரைப்பதே எனது நோக்கமாக இருந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் உறுதியளித்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் ஹோலி அன்று பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறையும் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் அனைத்து அம்சங்களையும் நான் நேசிக்கிறேன். நான் பலமுறை இந்தியாவுக்கு வந்திருக்கிறேன், இந்தியா மிகவும் அழகான நாடு, அற்புதமான நாடு. எனக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்த பிறகும் இந்தியாவை என்னால் வெறுக்க முடியாது. இந்தியாவும் ஜப்பானும் எப்போதும் நண்பர்களாகவே இருக்கும். தற்போது நான் பங்களாதேஷில் இருக்கிறேன், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஜப்பான் இளம்பெண் டெல்லி போலீசில் புகார் அளிக்கவில்லை. இது தொடர்பாக ஜப்பானிய தூதரகத்திடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லி 'ஹோலி' விழாவில் ஜப்பான் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. குஷ்பூ கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.