ஸ்ரீநகர்: அனந்நாக் (Anantnag) மாவட்டத்தில் உள்ள ஹாசன்போரா பிஜ்பெஹாரா (Hasanpora Bijbehara) பகுதியில் பயங்கரவாதிகள் இன்று (ஜன.29) காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலைமை காவலரான அலி முகம்மது மக்ரி (Ali Muhammad Magry) படுகாயம் அடைந்தார். அவரை சக காவலர்கள் மீட்டனர்.
தற்போது அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்துவருகிறது எனக் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய எல்லைக்குள் நுழைய தயார் நிலையில் 100 பயங்கரவாதிகள் - பாதுகாப்புப் படை தகவல்