சண்டிகர்: பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் துணை உயர் ஆணையர் கரோலின் ரொவெட் ஆகியோர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இந்த பயணத்தின்போது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நினைவிடத்திற்கு சென்ற ஆணையர்கள், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ், ஏப்ரல் 13, 1919 நடைபெற்ற படுகொலைகளை பிரிட்டன் மற்றும் இந்திய வரலாற்றில் "இருண்ட நாள்" என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பார்வையாளர் குறிப்பேடு பதிவிலும் தனது உணர்வுகளை எழுத்துக்களாக பதிய வைத்துள்ளார். இவ்வாறு எழுதியுள்ள அந்த குறிப்பில், “1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக்கில் நடந்த செயல் மிகவும் வெட்கக்கேடானது. அந்த நேரத்தில் நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதற்காக மிகவும் வருந்துகிறோம். இந்த படுகொலையை ஒருபோதும் மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டெபானியா மெராசினியானு; ரோமானிய இயற்பியலாளரின் பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்ட கூகுல்!