ETV Bharat / bharat

"பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது" - அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய காரணம் - பாக் உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது

பயங்கரவாதம் இருக்கும்போது, இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

India
India
author img

By

Published : Dec 5, 2022, 7:50 PM IST

டெல்லி: ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலேனா பேயர்போக் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று(டிச.4) காலை இந்தியா வந்தார். முதல் நாளான இன்று டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், இந்தியா ஜெர்மனி இடையிலான உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்னை, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-ஈரான் உள்ளிட்ட நாடுகளின் விவகாரங்கள் என பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தனர். அதேபோல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள், ஜி20-க்கு இந்தியா தலைமை ஏற்றது உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்த சந்திப்பில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகள் குறித்தும் சிறிது நேரம் உரையாடினோம். இதில் முக்கியமான சவால் என்னவென்றால், பாகிஸ்தானில் பயங்கரவாதம் இருப்பதால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இது தொடர்பாக ஜெர்மனி தரப்பிலும் புரிதல் உள்ளது.

இந்தியா - ஜெர்மனி இடையிலான உறவுகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வலுவாக உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே அரசியல், வர்த்தகம், முதலீடு, மக்களிடையேயான சுமூக உறவுகள் மேம்பட்டுள்ளன" என்றார்.

ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேயர்போக் பேசியபோது, "உலகளவில் தற்போதுள்ள சவாலான தருணத்தில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. இந்த தலைமைப் பொறுப்பு எளிமையானது என்பதை இந்தச் சந்திப்பில் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் இந்தியா சர்வதேச பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்த தலைமையில், 'ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற குறிக்கோளுடன் இந்தியா செயல்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி. இது காலநிலை மாற்றத்தில் நம் அனைவருக்குமான பொறுப்பை எடுத்துக்காட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க:G20 presidency: உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.