டெல்லி: ஐநா சபையின் 76ஆவது அமர்வின் பொதுக்குழுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 7ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்றது. இதில், போட்டியிட்ட மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வெற்றி பெற்றார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவாக இருந்தன.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக இந்திய வந்துள்ள அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டெல்லியில் சந்தித்தார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ஜெய்சங்கர், அப்துல்லா ஷாஹித்தை சந்தித்தது நல்லதொரு நிகழ்வு என்றும், மாலத்தீவுக்குக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் எனவும் குறிப்பிட்டுளளார்.
பிரதமர் மோடி, உலக அரங்கில் மாலத்தீவு வளர்ந்துவருவதை பிரதிபலிக்கும் வகையில் அப்துல்லா ஐநா அவையின் பொதுக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அண்டைநாடுகளுக்கு முக்கியத்துவம், என்ற இந்தியாவின் கொள்கையின் முக்கியத் தூணாக மாலாத்தீவு இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டங்கள் துடிப்பான ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு' - மாலத்தீவு அமைச்சர்