காஷ்மீரில் பந்திபோரா பகுதியில் உள்ள ஷோக்பாபா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், அப்பகுதியில் மாநில காவல் துறையும், பாதுகாப்பு படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர், காயமடைந்தார்.
அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக உளவு பார்ப்பதை எதிர்க்கிறோம்- பெகாசஸ் குறித்து அமெரிக்கா