ஜம்மு-காஷ்மீர்: குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையில் 9 ஆர்ஆர், சிஆர்பிஎஃப் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் மாவட்டத்தின் ஹடிகம் பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் சரணடைந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராணுவத்தினர் சந்தேகத்திற்கிடமான இடத்தை நெருங்கியதும், மறைந்திருந்த பயங்கரவாதிகள் குழு ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலின் விளைவால் இரு பயங்கரவாதிகளின் பெற்றோரின் வற்புறுத்துலால் அவர்கள், பாதுகாப்புபடை அதிகாரிகளிடம் சரணடைந்ததாக பாதுகாப்பு படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக இதனைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள ஹடிகம் பகுதியில் இன்று (ஜூலை 6) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:குப்வாரா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை