கேரளாவில் நேற்று (ஏப்.06) சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த 21 வயது பூத் ஏஜெண்ட் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்சூர் எனும் அந்நபரின் சகோதரர் முஹாசின் என்பவரும் பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இடது ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்திறக்கிணங்க காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இடது ஜனநாயக முன்னணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும்' - பினராயி விஜயன் நம்பிக்கை