ETV Bharat / bharat

வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை நிலைநாட்டியது பிஎஸ்எல்வி சி-53 - செயற்கைகோள்

ஒரு வாரத்திற்குள் தனது இரண்டாவது வெற்றிகரமான பயணமாக, இஸ்ரோ மூன்று வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி53 மூலமாக விண்வெளியில் இருந்து துல்லியமான சுற்றுப்பாதையில் செலுத்தியது.

வெற்றிகராமாக செயற்கைகோள்களை நிலைநாட்டியது பிஎஸ்எல்வி சி53

author img

By

Published : Jun 30, 2022, 10:44 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: ஒரு வாரத்தில் தனது இரண்டாவது வெற்றிகரமான வணிகப் பயணத்தில், இன்று(ஜூன் 30) பிஎஸ்எல்வி சி53இல் விண்வெளித்தளத்தில் இருந்து துல்லியமான சுற்றுப்பாதையில் மூன்று வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.

இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று(ஜூன் 29) தொடங்கிய நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று(ஜூன் 30) மாலை 6.02 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி53 ஏவப்பட்டது. அதனைத்தொடர்ந்து டிஎஸ்-இஓ(DS-EO), நியூசார்(NeuSAR) மற்றும் சுகூப்-1(SCOOB-1) ஆகிய மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை 570 கி.மீ., சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறுகையில், ’ராக்கெட் மூன்று வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களை 10 டிகிரி சாய்வுடன் 570 கி.மீ., துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி உள்ளது. இன்றைய பணியின் மூலம், இந்த மூன்று செயற்கைக்கோள்களும் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் கடந்த வாரம் ஜிசாட் ஏவப்பட்டது. இந்த மாதத்திலேயே மற்றொரு பெரிய பணியை முடித்த நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL)-க்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்", என்று கூறினார்.

ராக்கெட்டில் அனுப்பப்பட்ட, டிஎஸ்-இஓ (DS-EO) எனும் செயற்கைக்கோள் 365 கிலோ எடையுள்ளது; நியூசார் (NeuSAR) 155 கிலோ எடை கொண்டது. இரண்டும் சிங்கப்பூர், கொரிய குடியரசின் ஸ்டாரெக் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. மூன்றாவது சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) செயற்கைக்கோளான சுகூப்-1 (SCOOB-1) 2.8 கிலோ எடையுள்ளவை ஆகும்.

இதையும் படிங்க: இனி இங்கு ஸ்விக்கி, சொமேட்டோ தேவையில்லை: வந்துவிட்டது உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.