பெங்களூரு: அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள நிலையில், அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.
-
TV D1 Onboard video https://t.co/3hedjrLgiA https://t.co/QRhVQ0chB7
— ISRO (@isro) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TV D1 Onboard video https://t.co/3hedjrLgiA https://t.co/QRhVQ0chB7
— ISRO (@isro) October 22, 2023TV D1 Onboard video https://t.co/3hedjrLgiA https://t.co/QRhVQ0chB7
— ISRO (@isro) October 22, 2023
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்1 திட்டத்தைச் செயல்படுத்தியது. அதைத்தொடர்ந்து தொடர்ந்து தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதனை 3 கட்டங்களாக மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன் முதல் கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தரையில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பாராசூட்டுகள் மூலம் மிதந்து கொண்டு இருந்த மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
கடற்பகுதியில் தரையிறங்கிய விண்கலத்தை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், "ககன்யான் மாதிரி விண்கலம் நேற்று (அக்.21) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகளவில் எதிர்பார்க்கப்படும் ககன்யான் விண்கலத்தில் சோதனைக்காக பெண்மனித ரோபோவை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
பூமியிலிருந்து 400கி.மீ. தூர சுற்று வட்டப் பாதைக்கு விண்கலம் 3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் வரை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின் பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் முதன்மைப் பணி.
குறைந்த நாட்கள் மட்டுமே செயலாக்கம் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும். தற்போது தற்காலிக சோதனைக்கு விமானப்படை வீரர்களுக்கு அனுபவங்கள் இருப்பதனால் அடுத்தாண்டு நிகழவிருக்கும் சோதனைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டம் மட்டும் வெற்றி அடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியாவை உருவாகும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ககன்யான் விண்கலம் சோதனை வெற்றிகரமாக நிறைவடந்த நிலையில், ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை இஸ்ரோ, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் தம்பதி கொலை வழக்கு.. ஒருவர் கைது! கடன் கேட்டு தராத ஆத்திரத்தில் கொலையா? போலீசார் விசாரணை!