ETV Bharat / bharat

Chandrayaan-3 : சந்திரயான்-3 விண்கலத்தின் அப்டேட் என்ன? விஞ்ஞானி விளக்கம்!

author img

By

Published : Jul 15, 2023, 10:43 PM IST

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக முதல் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாகவும், விண்கலத்தின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் சீரான நிலையில் இருப்பதாகவும் இஸ்டோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Chandrayaan
Chandrayaan

டெல்லி : சந்திரயான் -3 விண்கலம் முதல் சுற்று வட்ட பாதையை வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும், விண்கலத்தின் இயக்கம் மற்றும் செயல்பாடு சீரான நிலையில் இருப்பதாகவும் இஸ்டோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து டெலிமெட்ரி, கண்காணிப்பு கற்றும் கமண்ட் நெட்வொர்க் மூலம் சந்திரயான் -3 விண்கலம் முதல் சுற்று வட்ட பாதையை வெற்றிகரமாக கடக்க வைத்ததாகவும், தற்போது வரை விண்கலம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ தன் ட்விட்டர் பக்கத்தில், "விண்கலத்தின் செயல்பாடு சீராக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முறை பெங்களூரு ISTRAC/ISRO-ல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41762 கிலோ மீட்டர் x 173 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Chandrayaan-3 Mission update:
    The spacecraft's health is normal.

    The first orbit-raising maneuver (Earthbound firing-1) is successfully performed at ISTRAC/ISRO, Bengaluru.

    Spacecraft is now in 41762 km x 173 km orbit. pic.twitter.com/4gCcRfmYb4

    — ISRO (@isro) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக விகரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் உன்னிகிருஷ்ணன் நாயர், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் -3 விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள உந்துவிசை கருவிகளை தூண்டி, பூமியில் இருந்து ஏறத்தாழ 41 நாட்கள் பயணத்திற்கு பிறகு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் விணகலத்தின் ரோவர் மெதுவகாக தரையிறங்க வழிவகை செய்வார்கள் என்று தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாள்ர்களை சந்தித்த அவர், விண்கலம் மிக சிறப்பாக செயல்பட்டதாகவும், சந்திரயான்-3க்கு தேவையான ஆரம்ப நிலைத் தன்மைகள் மிகத் துல்லியமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் இன்று (ஜூலை. 15) முதல், உந்துவிசை கருவிகளை தூண்டி, வரும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 தரையிறங்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்

கடந்த ஜூலை 14 ஆம் தேதி அந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து LVM3-M4 ராக்கெட்டில் சந்திரயான்-3ஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்ட ராக்கெட், 17 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோளை துல்லியமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

இதையும் படிங்க : டெல்லி அவசர சட்டம்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் திடீர் ஆதரவு.. சோனியா காந்தி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.