ETV Bharat / bharat

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்... இஸ்ரோ கொடுத்த நல்ல சேதி! - Chandrayaan 3 close moon surface in tamil

நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள அடுத்த அடுக்கில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

ISRO
ISRO
author img

By

Published : Aug 9, 2023, 4:44 PM IST

Updated : Aug 11, 2023, 2:18 PM IST

பெங்களூரு : நிலவின் சுற்றுவட்ட பாதையில் அடுத்த அடுக்கில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடத்தப்பட உள்ள அடுத்த கட்ட முயற்சியில் சந்திரயான் 3 விண்கலம், நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுவட்டபாதைக்குள் எடுத்தச் செல்ல திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இன்று (ஆகஸ்ட். 9) நடத்தப்பட்ட நகர்வின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதைக்கு நெருக்கமாக 174 கிலோ மீட்டர் X 1437 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேற்றி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அடுத்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ள அடுத்த முயற்சியில் நிலவுக்கும், சந்திரயான் 3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் இன்னும் குறைக்கப்படும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் நிலவுக்கும் சந்திரயான் 3 விண்கலத்திற்கும் இடையே இன்னும் இரண்டு சந்திர நகர்வுகள் மற்றும் இருப்பதாகவும் ஆகஸ்ட் 14 அல்லது 16 ஆம் தேதி சந்திரயன் விண்கலம் நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலான சந்திர அடுக்குக்குள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அதற்காக கடந்த ஜூலை 15ஆம் தேதி பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ நிலைநிறுத்தியது. அடுத்தடுத்த கட்டமாக ஜூலை 17ஆம் தேதி இரண்டாவது வட்ட பாதையிலும், 3வது வட்ட பாதைக்கு 18ஆம் தேதியிலும், அதேபோல் 4வது வட்ட பாதைக்கு ஜூலை 20ஆம் தேதியும் நிலை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி 5வது வட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்த 5 நாட்களுக்கு பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிய சந்திரயான் 3 விண்கலம், ஆகஸ்ட் 1ஆம் தேதி புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.

தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் விண்கலம் நுழைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மறுநாள் சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருந்த அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமிரா நிலவை படம் பிடித்ததை இஸ்ரோ வெளியிட்டது.

இதையும் படிங்க : சந்திரயான்-3 விண்கலத்தின் பார்வையில் நிலவு - இஸ்ரோ வெளியிட்ட தகவல்!

Last Updated : Aug 11, 2023, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.